ஞாயிறு, 19 ஜனவரி, 2014

இரண்டாம் உலகம் பார்த்தே


இன்று தான் இரண்டாம் உலகம் பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. இன்று திரையரங்கில் சென்று பார்த்தேன் காரணம் பேஸ்புக்கில் இத் திரைப்படம் "தோல்வி தோல்வி...!!" எனக் கொக்கரிக்கப்பட்டது... அதனால் தான்.. படம் உண்மையில் சிறந்த ஓர் அனுபவமாக இருந்தது..!!

1. அழகான பொண்ணு propose பண்ணும் போது ஒத்துக்கணும்.
2. காதலியை பிரிந்த பின் ஒரு தடவை நேரில் பார்க்க மனம் துடிக்கும்.
3. "ராஜா ராணி படத்தில் காதலுக்குப் பின் ஒரு வாழ்க்கை" செல்வராகவனின் இரண்டாம் உலகத்தில் காதலி பிரிந்தால் வாழ்க்கையே வெறுக்கும்... 
4.இறக்கும் கடைசி நிமிடத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கை பற்றி ஓர் குறும்படம் தோன்றும்... 

இதை விட எவளவோ கூற உண்டு.

குறை என்று பார்த்தால் வேறு கிரகத்தில் இருப்பவர் எவ்வாறு "கம்மனாட்டி, பேய்... என்று சென்னை தமிழில் திட்டுகிறார்.."
தமிழ்படம் தமிழில் தானே கதைக்க வேண்டும் என்று நினைத்தால் இதெல்லாம் பெரிதாகத் தெரியாது...

ஆங்கிலப் படத்தில் ஆர்வம் காட்டி இப்படி தமிழில் ஒரு படம் இல்லையே எனப் புலம்புவார்கள் அதையே ஒரு டைரக்டர் எடுத்தல் படம் மொக்கை, ப்ளோப் எனக் கூறுவது...

தமிழ் ரசிகன் தமிழ் படங்களை ரசிக்கக் கற்றுக்கொள்....!!!

0 comments:

கருத்துரையிடுக