| தோல்வி குறித்து மெத்திவ்ஸ் விளக்கம் |

எதிர்மறையான தந்திரோபாயங்களே பாகிஸ்தான் அணிக்கெதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடையக் காரணம் என்பதை இலங்கை அணித் தலைவர் அஞ்ஜலோ மெத்திவ்ஸ் நிராகரித்துள்ளார்.
துடுப்பாட்டவீரர்கள் இரண்டாம் இனிங்ஸில் சற்று எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் என போட்டியின் பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
100 ஓட்டங்களுக்கு இறுதி ஐந்து விக்கெட்டுக்களையும் இலங்கை அணி பறிகொடுத்ததாக மெத்திவ்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடரில் ஏற்கனவே முன்னிலை பெற்றிருந்ததால், ஒட்டங்களைப் பெறுவதையும், விக்கெட்டுக்களை இழப்பதையும் தவிர்த்து, தற்காப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
போட்டியின் இறுதிநாள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை என குறிப்பிட்ட அஞ்ஜலோ மெத்திவ்ஸ், அழுத்தத்திற்கு மத்தியில் பிரசன்ன ஜயவர்தன சிறப்பாக துடுப்பெடுத்தாடியதாக தெரிவித்துள்ளார்.
சார்ஜாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, தொடரை ஒன்றுக்கு ஒன்று என சமப்படுத்தியிருந்தது.



0 comments:
கருத்துரையிடுக